வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அனைத்து அரசு அலுவலக சங்கங்களும் இதற்கு எதிராக போராடி விசிக கவுன்சிலருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் ஏன் எந்த அரசியல் கட்சிகளும் எந்த சங்கங்களும் இதுவரை வாய் திறக்கவில்லை
அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள்.
புவனகிரி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 35; புவனகிரி பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளர். இவரிடம், புவனகிரி பேரூராட்சி, 1வது வார்டில் குடியிருப்பு திட்டத்தில் செய்த பணிக்கான காசோலையை விடுவிக்குமாறு, சில நாட்களுக்கு முன் அந்த வார்டு வி.சி., கட்சி கவுன்சிலர் காளிமுத்து, 38, கேட்டதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன் அலுவலகத்தில், ராதாகிருஷ்ணன் பணியில் இருந்த போது, காளிமுத்து காசோலை கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காளிமுத்து, ராதாகிருஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பதிலுக்கு ராதாகிருஷ்ணனும் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. அருகில் இருந்த ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். ராதாகிருஷ்ணன் புகாரில், காளிமுத்துவை புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அனைத்து அரசு அலுவலக சங்கங்களும் இதற்கு எதிராக போராடி விசிக கவுன்சிலருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் ஏன் எந்த அரசியல் கட்சிகளும் எந்த சங்கங்களும் இதுவரை வாய் திறக்கவில்லை
அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள்.