மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
04-Jul-2025
விருத்தாசலம்:சிகரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிக ரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்க தலைவர் சையத் முஸ்தபா, சிறப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ெஷரிப், ராஜசேகர், அமர்ராஜ் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர். பின்னர், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜிடம் மனு கொடுத்தனர். மனுவில், மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், விருத்தாசலம், நல்லுார், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் வசிக்கும் பலர் வீடு இல்லாமல் வசிக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி, நுாறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
04-Jul-2025