உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யூ.ஜி.சி.,வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி போராட்டம்

யூ.ஜி.சி.,வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி போராட்டம்

கடலுார்,: கடலுார் பெரியார் கலைக் கல்லுாரியில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் யூ.ஜி.சி., அறிக்கை:2025ஐ திரும்ப பெறக் கோரி வாயிற்முழக்க போராட்டம் நடந்தது. மண்டல பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.கிளை தலைவர் திலக்குமார், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஹென்றி, ராஜலட்சுமி, ராஜ்குமார், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், சாந்தி, ஷர்மிளா, அன்பரசி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதன் பொருட்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு நெறிமுறைகள், மாணவர்கள் சேர்க்கையில், பாடத்திட்டங்களில் விரும்பத்த காத மாற்றங்களை பரிந்துரைத்துள்ளதால், யூ.ஜி.சி., யின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை