கண்டன ஆர்ப்பாட்டம்
கடலுார் : கடலுாரில் அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கருப்பையன், சுப்பராயன் கண்டன உரையாற்றினர். இதில், ஆன்லைன் அபராதத்தை தடுத்த நிறுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் பாபு, சேக் தாவூத், சண்முகம் கலை முகிலன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.