உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருவாய்த்துறை கூட்டமைப்பு மாவட்டத்தில் போராட்டம்

வருவாய்த்துறை கூட்டமைப்பு மாவட்டத்தில் போராட்டம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய அவகாசம் அளிக்க வேண்டும், இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நில அளவை துறை ஒன்றிப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தினகரன் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம்: ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருமாவளவன், இளங்கோபாரதி, கிராம உதவியாளர் சங்கம் வேலுசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வேப்பூர்: மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் உமாதேவி, நிர்வாகிகள் ராஜவேல், ரகுராமன், ராமகிருஷ்ணன், அருள், சிவக்குமார் பங்கேற்றனர். திட்டக்குடி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலராஜ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராணி, துரைராஜ், மணிகண்டன், புவனேஸ்வரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை