நிவாரண உதவி வழங்கல்
சிறுபாக்கம்; திட்டக்குடி சட்டசபை தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.பெஞ்சல் புயலால் பெய்த கனமழையில் மாவட்ட எல்லையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில், திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சிறுபாக்கம், பாசார், கழுதூர், கொரக்கவாடி உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை சந்தித்த, எம்.கே.டி., குரூப் நிர்வாக இயக்குனர் தமிழரசு, அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது, வேப்பூர் ராஜா, ஐவதுகுடி ராஜவேல், சூர்யா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.