கல்வி உபகரணம் வழங்கல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்மன்றம் சார்பில், வெள்ளியக்குடி தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேத்தியாத்தோப்பு தமிழ்மன்ற நிர்வாகிகள் நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், கோபிநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், எண் கணித வாய்ப்பாடு, பென்சில், பேனா மற்றும் சுவர்கடிகாரம் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினர்.