குப்பை அள்ளும் வாகனங்கள் சிதம்பரம் நகராட்சிக்கு வழங்கல்
சிதம்பரம்,: சிதம்பரம் நகராட்சிக்கு, தனியார் வங்கி சார்பில், குப்பை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.சிதம்பரம் பெடரல் வங்கி சார்பில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள், சிதம்பரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. அதனை, துாய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற சேர்மன் செந்தில்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.அப்போது நகராட்சி கமிஷனர் மல்லிகா, வங்கி புதுச்சேரி பிராந்திய மேலாளர் சுஜித், சுகுமாறன், சிதம்பரம் கிளை மேலாளர் அபிஷேன், பொறியாளர் சுரேஷ், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், தில்லை மக்கின், அப்பு சந்திரசேகரன், சித்ரா , பாலசுப்பிரமணியன், மணிகண்டன், தாரணி அசோக், இந்துமதி அருள், சரவணன், கல்பனா, சுனிதா மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை சேர்மன் வழங்கினார்.