உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 47 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

47 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார் : தேசிய கைத்தறி தினத்தையொட்டி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 47 நெசவாளர்களுக்கு ரூ. 22.80 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 11வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, 47 நெசவாளர்களுக்கு 22.80 லட் சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'நெசவாளர்கள் பொரு ளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் கைத்தறி துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கடனுதவிகள், தறி உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு மானிய தொகை வழங்குகிறது. 1905ம் ஆண்டு ஆக., 7ம் தேதி துவங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறி தினம் 2015 முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது' என்றார். விழாவில், கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை