மேலும் செய்திகள்
கடலுாரில் கடல் சீற்றம்
23-Nov-2024
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று இரண்டாவது நாளாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலுார் தாழங்குடா, தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்தது. ஆனால், நேற்று தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், கடல் சீற்றம் மற்றும் அலையின் வேகம் குறைந்து காணப்பட்டது.புயல் காரணமாக நேற்று முன்தினம் சில்வர் பீச்சிற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று இரண்டாவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டதால், பீச் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பீச்சிற்கு அருகில் உள்ள பூங்கா மற்றும் காலியிடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அமர்ந்திருந்து சென்றனர். மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாமல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
23-Nov-2024