உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் அரசு கலை கல்லுாரியில் 30ம் தேதி பொது கலந்தாய்வு 

சிதம்பரம் அரசு கலை கல்லுாரியில் 30ம் தேதி பொது கலந்தாய்வு 

கிள்ளை : சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், வரும் 30ம் தேதி பொது கலந்தாய்வு நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் கூறினார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மற்றும் முதுநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 30ம் தேதி பொது கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இணையவழி விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்த சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், 3 போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !