மேலும் செய்திகள்
நாளை (ஆக.26) மின்தடை
25-Aug-2025
கடலுார்; கடலுார் கூத்தப்பாக்கம், ராமநாதன் நகர், கோபால் பிள்ளை நகர், புஷ்ப பிரியா நகர், சாந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் ராமநாதன் நகரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோ வரவேற்றார். உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். பொருளாளர் குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் திருவந்திபுரத்திலிருந்து வரும் பிரதான மழைநீர் வடிகால் சின்ன வாய்க்கால் முறை யாக துார்வாரப்பட வேண்டும். தரமான சாலை வசதி அமைக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து சந்திப்பிலும் சோடியம் விளக்கு பொருத்த வேண்டும். பன்றிகள் நடமாட்டத்தை தடைசெய்ய வேண்டும். ரேஷன்கடை, அங்கன்வாடி பள்ளி அருகே மதுப்பிரியர்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நகர் சங்க இணைச் செயலாளர்கள் நாசர், பாபு, செல்வம், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
25-Aug-2025