பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம்
கடலுார் : கடலுார் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் நேற்று நடந்தது.முகாமிற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரம்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் இளம்பிறை முன்னிலை வகித்தனர். முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய ரேஷன் கார்டு உட்பட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று குறைதீர் முகாம் நடந்தது.