உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி

காட்டுமன்னார்கோவில்; வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 3,000 கன அடியாக குறைந்து, வெள்ளியங்கால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கு செங்கால் ஓடை வடிகால், பாப்பாக்குடி வடிகால், ஆண்டிப்பாளையம் வடிகால் ஆகியன வழியாக நேற்று மதியம் நிலவரப்படி தண்ணீர் 3,000 கன அடி வரத்து இருந்தது. ஏரியின் நீர் மட்டம் 45.54 அடியாக இருந்தது. ஏரிக்கு வரத்தாக உள்ள உபரிநீர் 3,000 கன அடி, லால்பேட்டை மதகு வழியாக திறந்துவிடப்பட்டது. மேலும் வடவாறு மற்றும் கருவாட்டுவாலி ஓடை, நாரை ஏரி வழியாக வரும் உபரி நீர் வடவாறு மதகு மூலம் 4,000 கன அடி அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால், வெள்ளியங்கால் ஓடையில் 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓடையில் வெள்ளப் பெருக்கு குறைந்து, கிராமங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வருகிறது. தண்ணீர் மேலும் படிப்படியாக குறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அணைக்கரை: கீழணை நீர் மட்டம் 7.3 கன அடியாக உள்ளது. கன மழை காரணமாக கீழணைக்கு இரண்டாவது நாளாக 30,000 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே கீழ்கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது. முக்கொம்பு மேல் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 17,000 கன அடியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால், கீழணைக்கு வரும் தண்ணீர் அளவும் படிப்படியாக குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை