மேலும் செய்திகள்
மயானத்திற்கு செல்ல ரோடு வசதி ஏற்படுத்த கோரிக்கை
25-Apr-2025
காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகம் ஊராட்சிக்குட்பட்டசின்ன காளவாய் மேடுகிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மயானத்திற்கு செல்லும், மோசமான பாதையாக உள்ளவயல்வெளி பாதையிலும், ஒருவர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளார். இது குறித்து அரசு அலுவலர்களுக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதியவர் இறந்த நிலையில், மயானத்திற்கு பாதை இல்லாததால், புதர் மண்டிய விவசாய நிலத்தின் வழியாக உடலை சுமந்து சென்றனர். அப்போது ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு வருவாய் துறையினர், சுடுகாட்டு பாதை பாதை அமைக்க உள்ள இடத்தைபார்வையிட்டு சென்றனர்.அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், இப்பிரச்சனைகிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. எனவே, வருவாய் துறையினர், சுடுகாட்டுக்கான பாதையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Apr-2025