மேலும் செய்திகள்
தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
29-Apr-2025
கடலுார் : கடலுாரில் மா.கம்யூ., பொது நல இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரசாரம் நடந்தது. கடலுார் அடுத்த எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும். கடலுார் அரசு போக்குவரத்து கழக பனிமனையை வேறு இடத்திற்கு மாற்றி, தற்போதைய பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இன்று 13ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக கடலுாரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், பொது நல இயக்கங்கள் மற்றும் மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். வி.சி., மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், துணை மேயர் தாமரைச்செல்வன், மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத், குடியிருப்போர் நலச்சங்கம் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர். நாகராஜ், ரங்கநாதன், ரமணி, மருதவாணன், ரவி, சுப்புராயன் பங்கேற்றனர்.
29-Apr-2025