உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டென்னிஸ் போட்டிக்கு தகுதி: மாணவர்களுக்கு பாராட்டு

டென்னிஸ் போட்டிக்கு தகுதி: மாணவர்களுக்கு பாராட்டு

கடலுார்: மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் மாணவர் பிரிவில் 14வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் லோகேஷ், இரட்டையர் பிரிவில் ஜெகதீஷ், சேஷகிரி, 17வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் ராஜவீரா, இரட்டையர் பிரிவில் ராஜவீரா, ஜெயனேஷ், 19வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் லட்சுமி நாராயணன், இரட்டையர் பிரிவில் பிரணவ ராஜ், சோம்நாத் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவிகள் பிரிவில் 17வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் தமிழ்விழி, இரட்டையர் பிரிவில் தமிழ்விழி, சவ்மித்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர். முதலிடத்தை பிடித்த அனைவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷர்மிளா , கடலுார் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வசந்தி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ