உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே தொழிற்சங்க தேர்தல்; கடலுாரில் ஓட்டுப்பதிவு துவக்கம்

ரயில்வே தொழிற்சங்க தேர்தல்; கடலுாரில் ஓட்டுப்பதிவு துவக்கம்

கடலுார்; ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில நடைபெறாமல் இருந்த ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று துவங்கியது. நாளை வரை நடைபெறும் இத்தேர்தலில் ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும் 12. 20லட்சம் ஊழியர்கள் ஓட்டளிக்கின்றனர்.ஓட்டுப்பதிவு துவங்கிய நேற்று கடலுார் முதுநகர் ஓட்டுச்சாவடியில், ரயில்வே ஊழியர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். மொத்தமுள்ள 315 ஓட்டுகளில் 184 ஓட்டுகள் நேற்று பதிவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை