மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை நகரமன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்
சிதம்பரம்: 'சிதம்பரம் நகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என நகர மன்ற தலைவர் செந்தில்குமார் பேசினார். சிதம்பரம் நகர மன்ற கூட்டம், நகர மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துக்குமரன், கமிஷனர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், நிர்வாக அலுவலர் காதர்கான் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் மற்றம் முடிவுற்ற பணிகள் குறித்து கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினர். நகர மன்ற தலைவர் பேசுகையில், 'அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் சரி செய்யப்பட்டு வருகிறது, நகராட்சி ஊழியர்கள் வார்டு வாரியாக கொசு மருந்து அடிப்பதோடு, நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 9 இடங்களில் நடந்தது அதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு பெறப்பட்டு அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.