உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் தேங்கும் மழைநீர் மாணவர்கள் அவதி

சாலையில் தேங்கும் மழைநீர் மாணவர்கள் அவதி

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் சாலை வழியாக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.அப்பகுதியில் சிறிய மழை பெய்தாலும் இந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்குகிறது.இதனால் புதுப்பாளையம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதுபோல் பல குறுக்கு சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ஆகையால் கீழ்மாம்பட்டு ஊராட்சி புதுப்பாளையம் கிராமத்தில் தண்ணீர் தேங்குவதை சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ