உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவில் நடந்த நிகழ்ச்சியில், மழைநீரின் தேவை குறித்தும், தற்போதைய சூழலில் நிலத்தடி நீரை பாதுகாக்க, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. கட்டடம் உரிமம் வாங்கும்போது, மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி, தலைமை எழுத்தர் செல்வராஜ், துப்பரவு ஆய்வாளர் பிரீத்தி, இளநிலை பொறியாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை