ரஜினி மகள் சாமி தரிசனம்
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவிலில், நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா கணவருடன் தரிசனம் செய்தார்.பெண்ணாடத்தில் அமைந்துள்ள அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மாலை 5:00 மணியளவில் நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, இவரது கணவர் விசாகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.மூலவர் பிரளய காலேஸ்வரர் மற்றும் தாயார் அழகிய காதலி அம்மன் சன்னதியில் தன் பெயர், கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் சவுந்தர்யா அர்ச்சனை செய்தார். தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள வினை தீர்த்த விநாயகர், மலைக்கோவில் சவுந்தரேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்து, மாலை 5:21 மணிக்கு புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் சவுந்தர்யா, கணவர் விசாகனுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.