உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராஜிவ்காந்தி பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்

ராஜிவ்காந்தி பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்

காட்டுமன்னார்கோவில்: நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 171 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி சங்கவி 595 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், ஜாய்ஸ் மெர்லின், கென்னி 592 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மதுலிகா, ராகவி, கெலின், சிவரஞ்சனி 591 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 99 பேர் 550க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி நிறுவனர் மணிரத்தினம் பாராட்டி பரிசுகள் வழங்கினார். தாளாளர் சுதா மணிரத்தினம், செயலர் கமலக்கண்ணன், அரவிந்தன், செல்வரத்தினம், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை