உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு

பா.ம.க., பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் செல்வராசு, தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார். கவுரவ தலைவர் மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில பொது செயலாளர் முரளி சங்கர், மாநில மகளிரணி தலைவர் சுஜாதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில துணை தலைவர் ராஜீ, மாநில சமூக நீதி பேரவை துணை தலைவர் தனபாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜீ, மாவட்ட செயலர்கள் ஜெகன், வழக்கறிஞர் கோபி, சசிகுமார் பாண்டியன், முன்னாள் நகராட்சி சேர்மன் முருகன், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை