உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு ராமதாஸ் அஞ்சலி

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு ராமதாஸ் அஞ்சலி

கடலுார்; பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில், இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1987ம் ஆண்டு நடந்த இடஒதுக்கீடு போாரட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு நினைவாக, கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள அவரது நினைவு துாணில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தேசிங்கு குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். ராமதாஸ் மகள் காந்திமதி, கவுரவத் தலைவர் மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, முன்னாள் தலைவர் தீரன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், சுரேஷ், சசிகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை