ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் வெற்றி
வேப்பூர் : என்.நரையூர் ஸ்ரீராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருவாசகம் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்றனர்.கயிலை அறக்கட்டளை சார்பில் திருவாசகம் முற்றோதல் உள்ளிட்ட போட்டிகள் இணைய வழியில் நடந்தது. அதில், வேப்பூர் அடுத்த என்.நரையூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 35 பேர் பங்கேற்றனர்.இதில், 8 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கதிரவன் பாராட்டினார். துணை தாளாளர், முதல்வர், துணை முதல்வர் உடனிருந்தனர்.