ரத்தனா பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதனை
பண்ருட்டி : பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் 2025--26 ஆண்டிற்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் மாணவ,மாணவிகள் தங்கம்,வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர். சாதனை மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் மாயகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகி யோர் பாராட்டினார். பள்ளி முதல்வர் ரவி, தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். சாதனைக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கலைவாணன், தினேஷ்குமார், பவித் ராஜ் ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.