உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடையில் ஊழியரை வைத்து பூட்டியதால் பரபரப்பு

ரேஷன் கடையில் ஊழியரை வைத்து பூட்டியதால் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, தரமில்லாத அரிசி வழங்கியதால், ரேஷன் கடையில் ஊழியரை வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நேற்று காலை அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது, அரிசி தரமில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ரேஷன் கடை ஊழியர் சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்தனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து வந்த அரிசியையே வழங்கியதாக அவர் கூறினார். ஆத்திரமடைந்த மக்கள், அவரை 12:00 மணிக்கு கடையின் உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, கடையை திறந்து ஊழியரை 12:15 மணிக்கு விடுவித்தனர். உடன், வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி, தரமான அரிசி வழங்குவதாக கூறினார். அதுவரை கடையை திறக்க கூடாது என மக்கள் கூறியதால் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை