உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

கடலுார்: கடலுாரில் இன்று நடைபெற இருந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர்கள், மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் மூலமாக தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடலுாரில் கடந்த 25ம் தேதி துவங்கி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.இன்று 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர் முகத் தேர்வு கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வரும் 5ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி