ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்
கடலுார்; கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை அனைத்தையும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தியும், நிலுவையிலுள்ள 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப்.22, 23, 24ம் தேதிகளில் வேலைநிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர். நேற்று கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ், வட்ட தலைவர் குமரன் முன்னிலை வகித்தனர். தமிழ் செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சரவணன் கண்டன உரையாற்றினார். மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் பெரும்பாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.