உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விடுபட்ட ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம்; இன்று முதல் வழங்கப்படும் பண்ருட்டி சேர்மன் தகவல்

விடுபட்ட ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம்; இன்று முதல் வழங்கப்படும் பண்ருட்டி சேர்மன் தகவல்

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கம் மழை, வெள்ள நிவாரணம் இன்று முதல் வழங்கப்படும் என நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தெரிவித்தார்.பண்ருட்டி நகரத்தில் பெஞ்சல் புயல்,மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு 2528 நபர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 நிவாரணம் வழங்கினர். மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. வார்டு 1,3 உள்ளிட்ட வார்டு மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் கூறுகையில் பண்ருட்டி நகரத்தில் விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை,வெள்ள நிவாரண 2000 ரூபாய் வழங்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையின்படி அனைத்து கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் நிவாரணம் வழங்கிட உத்திரவிட்டுள்ளார். அதன்படி பண்ருட்டி நகரத்தில் விடுபட்டுள்ள 14,619 கார்டுதாரர்களுக்கு நிவாரணம் இன்று அல்லது நாளை முதல் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !