உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்பத்திற்கு நிவாரணம் : பா.ஜ., ஆர்ப்பாட்டம்

குடும்பத்திற்கு நிவாரணம் : பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், சவுடு மணல் குவாரியில் தண்ணீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராகேஷ், அகத்தியர், மாவட்ட பொருளாளர் சீனு சங்கர், பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வெற்றிவேல் சாம்பவர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி முன்னிலை வகித்தனர். கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்ட தலைவர் மருதை, மாவட்ட செயலாளர்கள் சிலம்பரசன், திருமாவளவன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாபதி சிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், சித்ரா, மண்டல தலைவர்கள் லட்சுமி நரசிம்மன், முருகன், உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் மதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை