மேலும் செய்திகள்
ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
21-May-2025
சிதம்பரம்; சிதம்பரத்தில் குருநமச்சிவாயர் திருப்பாற்கடல் மடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.சிதம்பரம் வேங்கான் தெருவில் பிரசித்தி பெற்ற குருநமச்சிவாய மடம் உள்ளது. கோவிலை சுற்றியுள்ள பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டிஸ் வழங்கினர். மேலும், கோர்ட் உத்தர வின்படி, ஆக்கிரமப்பில் இருந்த 13 வீடுகள் கடந்தாண்டு அகற்றப்பட்டது. இதில், 9 வீடுகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதன் காரணமாக 9 வீடுகள் இடிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மீண்டும் கோர்ட் உத்தரவின்படி ஹிந்து சமய உதவி ஆணையர் சந்திரன், தனி வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் 9 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலும் இடித்து அகற்றும் பணி நடந்தது. சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
21-May-2025