உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் சீரமைப்பு பணி

சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் சீரமைப்பு பணி

மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 6 மாதங்களாக மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதில், புதிய நடைமேடை மேற்கூரை, மின்னொளி அறிவிப் பலகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், சிதம்பரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நடைமேடையின் மேற்கூரைகள் வழியாக மழை நீர் முழுவதும் வழிந்தது. இதேப் போன்று, முகப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலும் மழை நீர் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் இவ்வளவு செலவு செய்த நடைமேடையின் மேற்கூரை ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்கவில்லை என, கேள்வி எழுப்பினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று காலை முதல் சேதமான மேற்கூரைகள் மற்றும் முன்பக்க நுழைவு வாயிலின் மேற்பக்கம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை