மேலும் செய்திகள்
செடல் திருவிழா
19-Jul-2025
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, செடல் திருவிழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
19-Jul-2025