மேலும் செய்திகள்
புறவழிச்சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம்
01-Oct-2024
விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சேதமடைந்த மெட்டல் பீம் கிராஷ் பேரியரை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. அதிக வாகன போக்குவரத்து காரணமாக நகரில் விபத்துகள் அதிகரித்தன. இதை தவிர்க்கும் வகையில், விருத்தாசலம் நகருக்கு வெளியே கடலுார் - சேலம் மார்க்கத்திலும், கடலுார் - உளுந்துார்பேட்டை மார்க்கத்திலும் புறவழிச்சாலைகள் போடப்பட்டன.அதில், விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், மேட்டுக்காலனி அருகே ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் 50 அடி உயரத்திற்கு மேலே, மெட்டல் பீம் கிராஷ் பேரியர் போடப்பட்டன. இதன் மூலம் விபத்தில் சிக்கும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழே பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழப்பது தவிக்கப்பட்டது.இந்நிலையில், இரும்பு தடுப்புகளை இணைத்து போடப்பட்டிருந்த போல்ட்டுகளை சமூக விரோதிகள் அகற்றியதால், அவை கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியானதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வசந்த பிரியா உத்தரவின்படி, ஆய்வாளர் ராணி தலைமையிலான சாலை பணியாளர்கள், இரும்பு இணைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, போல்டுகளை கழட்டி செல்லாத வகையில் வெல்டு வைத்து, அவை பாதுகாப்பாக இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
01-Oct-2024