உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

கடலுார்: தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பிரசார செயலாளர் சிங்காரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கடந்த 1.7.2025 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு மூன்று சதவிகித அகவிலைப்படியை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 1.7.2025 முதல் வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படியை மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்கவில்லை. இதனை ரொக்கமாக உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் மருத்துவ படியை ரூ. ஆயிரமாக்க வேண்டும். . கடந்த 12 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி