உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அயல் பணிக்கு சென்ற பல்கலை ஊழியர்கள் மீண்டும் திரும்ப பெற கோரிக்கை

அயல் பணிக்கு சென்ற பல்கலை ஊழியர்கள் மீண்டும் திரும்ப பெற கோரிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அயல் பணிக்காக அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியில் கல்லுாரி உட்பட பல்வேறு அரசு துறைகளுக்கு அயல் பணிக்காக அனுப்பப்பட்டனர். இந்நிலையில், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்கள் 24 பேர் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றனர். நடப்பு கல்வியாண்டில் 500 பேர் ஓய்வு பெற உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் பணப்பலன் வழங்கக் கோரி போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பல்வேறு துறைகளில் ஒன்று அல்லது இரண்டு பேராசிரியர்களை கொண்டு மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டுகளில் ஆசிரியர்கள் காலி பணியிடம் பணியிடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பல்கலைக் கழகத்தில் அயல் பணிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தேவையான எண்ணிக்கையில் மீண்டும் திரும்ப பெற வேண்டும் என பல்வேறு துறை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி