தார்சாலை சரி செய்திட கோரிக்கை
நடுவீரப்பட்டு: தார்சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே உள்ள பல்லவராயநத்தம் கிராமத்திற்கு கடலுார்–பாலுார் சாலையிலிருந்தும், பாலுார்–நடுவீரப்பட்டு சாலையிலிருந்தும் இவ்விரு வழியாகவும் செல்லும் தார்சாலை உள்ளது. இதில் கடலுார்–பாலுார் சாலை வழியாக ஊருக்குள் வரும் தார்சாலை கடந்த ஆண்டு புதியதாக போடப்பட்டது.இந்த சாலை போடும் பணியினை துவக்கப்பள்ளி வரை போட்டு பாதியிலேயே முடித்து விட்டனர். மீதம் உள்ள சாலையை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இந்த சாலை பல இடங்களில் குண்டும்,குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் பாலுார்–நடுவீரப்பட்டு செல்லும் சாலையிலிருந்து பல்லவராயநத்தம் செல்லும் குண்டும்,குழியுமாக உள்ள தார்சாலையை சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.