பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தில் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு-சி.என்.பாளையம் சாலையில், நெல்லித்தோப்பு சங்கிலியான் ஓடையில் கடந்த மாதம் ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக 20 க்கும் மேற்பட்டகிராம மக்கள் சென்று வருகின்றனர்.புதிய உயர்மட்ட பாலத்தில் விளக்குகள் போடாததால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பாலம் இருளில் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதியபாலத்தில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.