உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு ஒதுக்கீடு வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை

அரசு ஒதுக்கீடு வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டரிமட் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா விடுத்துள்ள கோரிக்கை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், கடந்த 2004ம் ஆண்டு சுனாமியின்போது வீடுகள் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு ஒதுக்கீடு செய்துக்கொடுத்தவர்களுக்கு மாதா அமிர்ததாயி அறக்கட்டளை சார்பில், குடியிருப்புகள் கட்டிகொடுக்கப்பட்டது. குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டு 21ஆண்டுகள் ஆகியும், அந்த இடத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்ககை இல்லை. எனவே, புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், அரசு ஒதுக்கீடு செய்துள்ள வீடுகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி