உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெல்கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 

 நெல்கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 

புவனகிரி: கீரப்பாளையம், புவனகிரியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைத்த திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் தற்போது சம்பா அறுவடை துவங்கி வருகிறது. போதிய இட வசதி இல்லாததால் கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் சாலை ஓரத்தில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் விற்பனைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால், தற்போது தனியார் வியாபாரிகள், விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை அடாவடியாக கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் வேறு வழியில்லாமல் நெல்மூட்டைகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். அதனால், விவசாயிகளின் நலனை உணர்ந்து தமிழக அரசு ஆண்டுதோறும் திறக்கும் நெல் கொள் முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ