மேலும் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
30-Jan-2026
புவனகிரி: புவனகிரியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதிகளில் தற்போது சம்பா அறுவடை துவங்கியுள்ளது. போதிய இட வசதி இல்லாததால் கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் சாலை ஓரத்தில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் விற்பனைக்காக காத்திருக்கின்றனர். இதனால், மழை பெய்யும் போது, நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது தொடர் கதையாக உள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-Jan-2026