உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் முட்புதர்கள் அகற்ற கோரிக்கை

வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் முட்புதர்கள் அகற்ற கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்றி துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி வி.என்.எ.எஸ்., மதகில் வெளியேற்றப்படும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி ஏ.டி.சி., மதகில் திறந்து வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வழியாக விவசாய பாசனத்திற்கும், பின்னலுார் வாலாஜா ஏரிக்கும் அனுப்பப்படுகிறது.வெள்ளாறுராஜன் வாய்க்கால் துார்வாரப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் வாய்க்காலில் கருவேல மரங்களும், முட்புதர்களும் அதிகளவில் வளர்ந்துள்ளன. வெள்ளநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.கோடை காலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. புதர் மண்டி கிடப்பதால் கோழி மற்றும் மின் கழிவுகள் கொட்டப்படுகிறது. எனவே, வாய்க்காலில் முட்புதர்களை அகற்றி துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ