உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

புவனகிரி : சாத்தப்பாடியில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புவனகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்கள், குறிஞ்சிப்பாடி மற்றும் மருதுார் காவல் நிலைய எல்லை பகுதியையொட்டி உள்ளது. இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றச்சம்பவங்கள் மற்றும் சாலையில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், சாத்தப்பாடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, புவனகிரி காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அடிக்கடி வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டன. இந்நிலையில், போலீசார் பற்றாக்குறை காரணமாக புறக்காவல் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துகளை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மீண்டும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி