கிடப்பில் நிழற்குடை பணி மீண்டும் துவங்க கோரிக்கை
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே கிடப்பில் போடப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டும் பணியை உடனடியாக துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொக்கரசன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கொ.ஆத்தார் கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியி ல் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டடம் கட்ட பள்ளம் தோண்டிய போது, தனி நபர், தனது வீட்டிற்கு வரும் வழியில் நிழற்கு டை கட்டுவதாக கூறி பணியை நிறுத்தினார். இதனால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் பணி துவங்காததால் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வீணாகிறது. மழை பெய்தால் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே, நிழற்குடை கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.