உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

புதுச்சத்திரம்: அலமேல்மங்காபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க, இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். புதுச்சத்திரம் அடுத்த அலமேல்மங்காபுரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மாலை நேரங்கள், விடுமுறை நாட்களில் விளையாட முடியாதநிலை உள்ளது. இதனால் அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு, அலமேல்மங்காபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை