மீன்பிடி இறங்குதளம் கலெக்டருக்கு கோரிக்கை
பரங்கிப்பேட்டை; மீன்பிடி இறங்குதளம் அமைத்துத் தர, முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டருக்கு, அவர் அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை பேரூராட்சி 4வது வார்டில், ஆரியநாட்டு சலங்குக்கார தெரு, ஆரியநாட்டு கிழக்குத் தெரு, ஆரியநாட்டு சத்திர தெரு ஆகிய மூன்று பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு, 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மீனவர்கள், மீன்பிடி தொழில் சுகாதாரமான முறையில் செய்வதற்கு, மீன்பிடி இறங்குதளம் இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அருகில், சிறிய அளவிலான மீன்பிடி இறங்குதளம் அமைத்தால் மீனவர்கள் தொழில் செய்ய வசதியாக இருக்கும். இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது.