மேலும் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Jul-2025
கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கத்தில் ராமநாதன் நகர், கோபால்பிள்ளை நகர், புஷ்ப பிரியா நகர், சாந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழுகூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார். பொருளாளர் குமார் அறிக்கை வாசித்தார். செயலாளர் இளங்கோ வரவேற்றார். 70 வயது பூர்த்தியான மூத்த உறுப்பினர்களுக்கு கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். நகரில் தரமான சாலை வசதி அமைக்க வேண்டும். திருவந்திபுரத்தில் இருந்து வரும் பிரதான மழைநீர் வடிகால், சின்ன வாய்க்கால் கடலில் சென்று கலக்கும் வகையில் துார் வார வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட் டன. ஏற்பாடுகளை சங்க இணை செயலாளர்கள் செல்வம், கிருஷ்ணராஜ், சங்கர், திருமலை செய்திருந்தனர். இணை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
24-Jul-2025