மேலும் செய்திகள்
பூஜாரிகள் நலச் சங்க கூட்டம்
28-Jul-2025
கடலுார் : கடலுாரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது. வரதராஜன் நகர் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், துணைத் தலைவர் இளங்கோவன், கண்ணபிரான், நடராஜன், ராஜேந்திரன், ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வெங்கடேசன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.கடலுார் பஸ் ஸ்டாண்ட்டை கடலுார் சட்டசபை தொகுதிக்குள் அமைக்க வேண்டும். மாவட்ட தலைநகரில் மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும். கொண்டங்கி ஏரி, கெடிலம் ஆறு, பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி கடலுாரில் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வெங்கட்ரமணி நன்றி கூறினார்.
28-Jul-2025